மொத்தப் பக்கக்காட்சிகள்

ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

உபதேசம்


உபதேசம்   மனித பலி அறியார்
மிருக பலி கண்டனரே
வெலிக்கடை செம்மணி,
குமுதினி ,வரிசையில்

முள்ளிவாய்க்கால்வரை
பலஆயிரம் மக்களையும்
பலஆயிரம் உயிரினங்களை
இனவெறிக்காய்
வேள்விசெய்தோர்
இன்றும் குத்தி குதறி
குடல் உருவி
கொலை புரிவோர்
புனிதர்கழாய்
நீலிக்கண்ணீர்
வடிக்கின்றனர்
புத்தருக்கு களங்கம்
தேடியவர்கள்
மிருகவதைகண்டு
துடிக்கின்றனர்
நடிக்கின்றனரோ
மனிதவதைக்கு
முற்றுவைக்காதவர்கள்
மிருகபலிக்கு
தடைபோடுகிறார்
உங்கள் உங்கள் ஊத்தைகளை
தூய்மை செய்துவிட்டு
ஊர்வாயின் ஊத்தய்க்காய்
உபதேசம் கூறுங்கள் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக