மொத்தப் பக்கக்காட்சிகள்

ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

உண்மையின் விழிப்பு

உண்மையின் விழிப்பு 

ஊட்டிவிட்ட வீரமும்
உணர்த்திவிட்ட உணர்வும் 
தடம் தவறாமல் 
தனித்துவம் கொண்டு
 
தாயகமந்திரத்தின் 
தனிவழிச் சிறப்பை  
மானம் இளந்தவருக்கும்
மதிகெட்ட அரசுக்கும் 
அழிவின் போது 
வேடிக்கை பார்த்த
உலக அரசுகளும்
உணர்ந்து கொள்ள 
தேவையை உணர்ந்து 
தெரிவிற்கு ஒப்பிசைந்த 
கலங்கரை விளக்குகளாம்  
நம்தமிழ் உறவுகளே 
நாம் சோரம் போகாதவர்கள் 
நமக்கு இனி துயரம் இல்லை 
ஒன்றுபட்டால் 
உண்டுவாழ்வு 
ஒருதலைமையே  
நமக்கான உயர்வு!!!
மாண்பு மிகு முதல்வனின் 
முதல்வருக்கும் 
வெற்றி வாகை சூடவைத்த
எம் இனிய உறவுகளுக்கும்
உலகதமிழர்களின் 
ஒன்றிணைந்த வாழ்த்துக்கள் 
இன்றுபோல் எண்றும் 
உரிமைகளை வென்று 
உதயமதைகண்டு
தமிழினம் தலைநிமிர 
எல்லோரும் ஒன்றுபடுவோம்.     
  
 அருளீசன்  
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக