அடிமை விலங்கு உடைக்க
ஆற்பரித்து எழுந்த
ஆபிரிக்க ஜோதி
மறுக்கபட்ட - உரிமைகளை
மறுதலித்தார்
வெண் இனத்தின் - வஞ்சம்
வெறி கொண்டு
பொங்கி எழுந்தது
போராளி ஆனார்
சிறை பட்டு
சித்திர வதைகள் - கண்டார்
இருபத்தி ஏழு ஆண்டுகள்
இருட்டறையில்
புலயர்கள்
புரட்டி எடுத்தனர்
புழுங்கி மடியாது
புரட்ற்சி கொண்டு
காந்தியை
கண்ணில் நிறுத்தி
கரைகாண துடித்தார்
காலம் கனிந்தது
காந்தியம் வென்றது
சமத்துவம் கிடைத்த
சஞ்சலம் நீங்கினர்
மக்கள் எல்லோரும்
மகிழ்ச்சியில்- மூழ்கினர்
மாமேதை நெல்சனை
தந்தையெனை மதித்தனர்
தரணியில் உயந்தார்
மண்டியிட்ட - இனத்துக்கு
மறுவாழ்வு கண்டவர்
மாண்புறவே வாழ்ந்து
மனம் நிறைந்து - வாழ்ந்தவர்
தனது 95ஆவது வயதில்
தரனி விட்டு மறைந்தாலும்
தரனி விட்டு மறைந்தாலும்
எல்லோரது மனங்களிலும்
என்றும் என்றும் வாழ்வார் !!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக