மொத்தப் பக்கக்காட்சிகள்

புதன், 22 டிசம்பர், 2010

வெண்மழை

பொங்கிச் சொரியிது 
வெண்மழை 
தங்கிக்குவியிது 
உறைநிலை 
கால்கள் மறுக்கிறது 
நடைதர 
கண்ணில் தெறிக்கிறது 
வெண் ஒளி 
கால தேவனின் 
செயல் வழி 
கண்ட இளையவர் குதுகளி 
கையில் அள்ளி அவர் தன்பணி 
உருவம் அமைப்பதும் 
உருட்டி எறிவதும்  
இவர் உறுதுணை போனவர் 
குளிரினில் தவிப்பதும்  
இளையவர் திரும்பிட 
மறுப்பதும் 
குதுகலம் காண 
மக்கள்  கூடுவதும் 
பனிமலைஏறி 
பள்ளத்தில் சறுக்குவதும் 
வெல்வது யார் என்ற 
வேகமும் பார்ப்பதும் 
சாதனை புரிந்தவர் 
வெற்றி கேடையம் 
பரிசாய் பெறுவதும் 
தவறி விழுந்தவர்  
கை கால் உடைவதும் 
எத்தனை வினோதம் 
கொட்டிய வெண் மழையில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக