மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 25 ஏப்ரல், 2011

உயிருடன் கொள்ளி













என்னை உருக்கி
என் கண்ணென நினைத்து
கருவிலிருந்தே
பக்குவம் இருந்து
பத்தியமுடனே
ஈன்று எடுத்த மகவே
பாலுட்டி
தினம் உணவு ஊட்டி
என் கனவும் கலந்து
உனக்கு ஊட்டி
கனவு நிஜமாகும்
நாளுக்காய்
காத்திருந்தேன்
நீயோ என் கருவான
உன்  வாயில்
வெண் விறகுமூட்டி
கணம் ஒரு தவனம் காட்டி
கருகிய இதயமும்
கலங்கிய மூளையுமாய்
என்கண்முன்னே!!!
மகனே, மகளே
இதற்கா கண்விளித்து
கடமைசெய்து
பிஞ்சுப் பாதம்
நிலத்தில் விடாது
தாங்கித்திரிந்து
தவங்கிடந்தேன்
என் வேதனையில்
பங்கெடுத்து சாதனைகள்
செய்வீர்
சரீரம்மது வீழ்ந்தால்
சந்தனக் கொள்ளி வைப்பீர்
என்று நான் எண்ண!
நீயோ தினம்தோறும்
உயிருடனே உனக்கு
நீயே கொள்ளிவைகிறாய்
எனக்குமுன் போவதற்கா?
வேண்டாம்
ஒரு தாயுக்கும்
இந்தநிலை
சேய்களே
விளியுங்கள்!!!

திங்கள், 18 ஏப்ரல், 2011

தாஜெனும் கோவிலுக்காய்

பிறந்தசித்திரையில் 
நிறைந்த பவுர்ணமியில் 
தமைபிரிந்த அன்னையற்காய் 
தரணியில் ஓர்நாள் 
உள்ளத்தால் உயர்ந்த 
தாஜெனும் கோவிலுக்காய் 
ஓர்நாள் விரதமிருந்து 
பிண்டம் படையல் இட்டு
பிதிர் கொடுத்து 
தன்னை இந்த 
புவிக்கு அளித்த 
தாய்க்கு ஒரு நாளை 
கண்ணியம் கொண்டு 
தீர்க்கவல்லா கடனுக்காய் 
தியானித்து திருவடியை 
வணங்கி நிற்போம் 

புதன், 13 ஏப்ரல், 2011

தட்டுங்கள் திறக்கப்படும்

ஆசையும் ஆர்வமும் 
அலைமோதும்போது 
எவரஸ் மலை கூட 
எள்ளிலும் சிறிதாய் தோன்றும் 
எடுத்தடி உச்சியை காணும்  
எண்ணியது ஈடேறும் 
அரும்பான சிறுவனின் 
குறும்பான கேள்வியும் 
விடாமுயற்சியும் 
ஆறுதல் கொள்ளாதபோது  
அங்கே பிறந்தது  வழி 
ஆறுதல்படுத்தவென 
இணையத்தில் இணைந்து 
இணைத்தனர் ஆசையை 
சாந்தபட்டவர் சாதனை- தொடர 
முதல்வரே வந்தார் 
முடியும் என்றார் 
முடியாது என்பதை 
முடித்தே வைத்தார் 
ஒருநாள் ஆட்சியில் 
நான்கேவயது சிறுவன் 
நாற்காலி அமர்ந்தான் 
முடியாது என்றொன்று -இல்லை 
என்பதற்கு முன்னோடி இவனே 
அடுத்து வ்ருவவைகளையும் 
ஆராய்ந்து பாருங்கள் 
இரண்டேவயது 
உலகத்தை தொட்டு 
சாதனை செய்கிறார் 
சந்திராயன் விண்ணில் 
இவர்களோ மண்ணில் 
இதை உணர்ந்தால் 
நம்மவர்களும் 
விண்ணிலும் 
மண்ணிலும் .  

சனி, 2 ஏப்ரல், 2011

எண்ணங்களை பிரதிபலிக்க !!!

எண்ணங்களை பிரதிபலிக்க 
வண்ணங்களை தீட்டுகின்றோம் 
அறிவையும் வெளிப்படுத்தும் 
ஆற்றலையும் தோற்றிநிற்கும் 
அழகையும் உணர்த்தும் 
ஆபாசத்தையும் ஊட்டிநிற்கும் 
அழிவுகளையும் சித்தரிக்கும் 
ஆடைகளையும் அலங்கரிக்கும் 
வர்த்தகத்தையும் பெருக்கிநிற்கும் 
விளம்பரத்தையும் கவரவைக்கும் 
இத்தனைக்கும் மூலமான வண்ணம் 
எத்தனை கோடி மக்களின் 
மூலமான நம்பிக்கையில் 
கரிபூசும் செயல் ஒன்றாய் 
காலனியில் பதித்து 
காட்சிப்பொருளாக்கி 
கடைத்தெருவில் 
விற்றசெயல்கண்டு 
வேதனையின் பிரதிபலிப்பால் 
வேதும்பிஎளுதுகின்றேன் 
மீண்டும் ஒருமுறையேனும் 
எந்தமதங்களையும் 
புண்படுத்த எண்ணாதீர் 
தாழ்மையுடன் இதற்காய் 
தகுந்த வழிசமைப்பீர்