மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 2 ஏப்ரல், 2011

எண்ணங்களை பிரதிபலிக்க !!!

எண்ணங்களை பிரதிபலிக்க 
வண்ணங்களை தீட்டுகின்றோம் 
அறிவையும் வெளிப்படுத்தும் 
ஆற்றலையும் தோற்றிநிற்கும் 
அழகையும் உணர்த்தும் 
ஆபாசத்தையும் ஊட்டிநிற்கும் 
அழிவுகளையும் சித்தரிக்கும் 
ஆடைகளையும் அலங்கரிக்கும் 
வர்த்தகத்தையும் பெருக்கிநிற்கும் 
விளம்பரத்தையும் கவரவைக்கும் 
இத்தனைக்கும் மூலமான வண்ணம் 
எத்தனை கோடி மக்களின் 
மூலமான நம்பிக்கையில் 
கரிபூசும் செயல் ஒன்றாய் 
காலனியில் பதித்து 
காட்சிப்பொருளாக்கி 
கடைத்தெருவில் 
விற்றசெயல்கண்டு 
வேதனையின் பிரதிபலிப்பால் 
வேதும்பிஎளுதுகின்றேன் 
மீண்டும் ஒருமுறையேனும் 
எந்தமதங்களையும் 
புண்படுத்த எண்ணாதீர் 
தாழ்மையுடன் இதற்காய் 
தகுந்த வழிசமைப்பீர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக