உலக மண் எங்கும் ஓயாது ஒலித்தோம்
மண்ணின் சோகத்தை
மனம் வெம்ப சொல்லி நின்றோம்
எவருமே செவி சாய்க்க வில்லை
ஒன்றரை மாதகாலம்
ஒருவரும் காணாக்கோலம்
நான்கு லேட்ச்சம் மக்கள் என்றோம்
நாதி அற்ற நிலை என்றோம்
பாதிகூட நோக்கவில்லை
பச்சாதாபம் காட்டவில்லை
பதைபதைக்க பல கொலை கள்
படைத்தது விட்ட சிங்களமுமும்
துணை புரிந்த வல்லரசுகளும்
ஏன்அங்கு போகின்றார்கள்
மிச்சமேனும் காக்காமல்
எச்சம் தேடி என்ன பலன்
தப்பியோடி வந்தவர்க்கும்
தரம் பிரித்து தடுப்புக்காவல்
எட்டுபட்டு முட்கம்பி வே லி
எவர்வருவர் எவர்வருவர்
எம்மை எவர் மீட்பார் என்று
ஏக்கம்கொண்ட நெஞ்சங்கள்
வளியைவளி பார்த்து
கண்கள் பூத்தபடி நிற்கும்
காட்ச்சி கள் பார்த்தும்
கருணைகொள் ளா உலகம்
கண்ணை மூடிஇருந்து விட்டு
கறைபடிந்த நிலத்தில்
துடைத்தளித்த தடயம்
தூர்வை செய்து பலன் என்ன
கணக்கில் இல்லா வதை முகாங்கள்
கண்காணா இடங்களில் அங்கே
கண்விழித்து தேடு உலகே
மரணித்த மனித நேயம் உயிர்கடும்
நன்றியுடன்
அருள் ஈசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக