விடியாத இரவுகள்
விழி மூடாதகனவுகள்
அவதியுறும் பெண்மை
தாய்மை கேலி செய்யும்
தயவற்ற வார்த்தைகள்
வேண்டாத விழி மூடல்
வெறுப்பான படுக்கை
விடியாத இரவுகள்
பல்மத வழிபாடு
பயமூட்டும் மருத்துவம்
சொ ல்லில் அடங்காத பத்தியங்கள்
சோகத்தின் உச்சம்
இன்னும் விடியாத இரவுகள்
தளராத பெண்மை
தாயானது உண்மை
வசை பாடிய உள்ளங்கள்
வாய்மூடியதன்மை
பால் வார்க்கும் வார்த்தகதைகள்
பக்குவம் செல்லவந்தும்
என்மனதில் விடியாத இரவுகள்
கையில்வந்த மழலை
கரம் சேர்த்த பெருமை
கண்கள் அறிந்த உண்மை
கண்கள் அறிந்த உண்மை
காலத்தின் ஓட்டத்தில்
கன்னி யானாள் மழலை
கணணியிலே கைதேர்ந்தாள்
விழி மூடா இரவாக
விழித்திருந்தேன் அருகே
விழித்திரையில் மண் தூவி
விரைந் தாளே தனி யாய்
பேதை மனம் பேதலித்து
பித்தாகி பிதறுதையோ
போனவழி பார்த்தோம்
பொய் உரைத்த உறவாம்
ஈரெட்டு பதினாறில்
ஆறேட்டுடன் உறவாம்
பெயர் கெட்டுப்போனதையோ
நான்பெற்ற உறவால்
எனைவிட்டுபோகவிலை
விடியாத இரவு.
அருளீசன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக