எங்கள் முற்றத்து முருங்கை மரம்
நித்தம் எழுந்தவுடன்
நிதர்சனம் தரும் அந்த
முற்றத்து முருங்கை மரம்
மண்ணை விட்டு இடம்பெயர்ந்தும்
மனதைவிட்டு போகவில்லை
நாம் சோறு அற்றுநின்றபோது
சொத்தாகி உயிர் பிடித்தாய்
நாங்கள் இறைத்த நீருக்கு
நலிந்து உழைத்த உன்னை
நாம் மறந்து ஒடவேன்றோ
சிங்களத்தின் படை வந்தான்
திசைமாறி ஓடிவிட்டோம்
தினம் ஒருக்கால் உன்நினைப்பு
மனதலைக்கு வந்துபோகும்
மதியம் ஒன்று உண்டு அதனால்
அருங்கோடைஎன்றாலும்
அங்கொன்று இங்கொன்றாய்
காய்க்காமல் விட்டதுண்டோ
பெதுவீட்டு பத்தியதுக்காய்
பெருந்தேடல் தேடி வருவார்
வந்தவரின் மனங்குளிர
மருந்துபோல் உதவிநிர்பாய்
வாங்கி அவர் செல்லும்போது
வாய் ஓயாது நன்றி சொல்வார்
இலை பறித்து வறுத்து உண்டால்
என்னசுவை எனி எப்போகான்ப்து
ஏங்கி நிர்கும் உன் எஜமான்.
நன்றியுடன்
அருளீசன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக