மொத்தப் பக்கக்காட்சிகள்

ஞாயிறு, 24 ஜனவரி, 2010

நேர்ந்த அவலத்தில் நெற்றிக்கண் திறக்கதோர்

எந்த முகம் கொண்டு
எம்முன் வருகின்றார்
வெந்த புண்ணோடு
வெற்று மனிதர்களாய்

 நொந்துநொந்து
 நோடிநோடியாய் சாகைசிலே
 என்கேபோயிருந்தார்கள்


 எவர் எமக்குகரம் கொடுத்தார்கள்
 நீங்காத கொடுமை நிலை
 நிலைமாறாதபோதே
 இந்த எதீலிகளிடம்
 எதற்கு வருகின்றார்


 நாம்பட்டதுயர் அனைத்தும்
 பரிவின்றி செய்தோரும்
 பக்கத்துணை போய்
 பலவழி சமைத்தொரும்
 எந்தமுகம்கொண்டு
 ஏமாற்ற எண்ணுகின்றார்


 நந்தவன பூமி எங்கும்
 நாம் கூடி மகிழ்ந்திருந்தோம்
 இன்று சொந்தம் இழந்து
 துணை இழந்து
 முட்கம்பி பட்டியிலே
 முடங்கி கிடக்கின்றோம்


 நாள்குறிக்காசாவுக்காய்
 நற் தமிழ் உறவுகளே
 நாம் அழிந்தாலும் கூட
 நம்மை அளிதொருக்கு
 நல்லபாடம் புகட்ட வேண்டும்.


 மிரட்டி வாக்கை வேண்டி ஏனும்
 மீள் ஆட்சிக்கு வருவதற்காய்
 எம்தலைகள் எனுகின்றார்
 விழித்திருங்கள் அவர்கள் தலைகள் எண்ணி
 வீதிக்கு அனுப்பிவைப்போம் .  


நன்றி
அருளீசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக