மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 25 ஜனவரி, 2010

கவி

கவி 

கவிதை கற்பனை குதிரை
ஓட்டுபவர் மனங்களில்
பிறக்கும் வேகம்
சிந்தனைக்கு விருந்து


சிறகடிக்கும் பருந்து
வார்த்தை நடனத்தின்
வர்ண வரியடக்கம்
தாளம் சேர்ந்தால்
மெருகூட்டும்
கற்பனை இதற்கு
வழிகாட்டும்
பிறக்கும்போது
பதிவு செய்தால்
சிறக்கும் கவி
உதித்தவர் மனங்களில்
சிலகாலம்
சுவைத்தவர் மனங்களில்
சுவை வாழும்
சொல்லநினைத்ததை
சுவைபடச்சொல்லுவதும் கவி
சாட்டையால் அடிப்பதுபோலும்
சமைக்கலாம்
சவாலுக்கும் அழைக்கலாம்
சாதிக்கவும் வைக்கலாம்
சரித்திரத்தையும் சொல்லலாம்
காதலர்கள் சேர்ந்துவிட்டால்
கடல்போல் பெருகிவரும்
கரையில்லாக்கவிதை
உலகத்தில்
உயிருள்ளவரை கவி வாழும் ...
கவி வாழும்
வாழ்க பல்லாண்டு.

நன்றி
அருளீசன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக