மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 26 பிப்ரவரி, 2010

எங்களூர் பூவரசு

என்னவென்று சொல்வேன் 
எங்களூர் பூவரசை 
கதியாலுக்கு நட்ட அந்த 
கட்டைதந்த விபரீதம் 
கத்திவெட்டு கோடு கச்சேரி 
கலகங்கள் பலதந்து 
மேலும் கதியலும் தான் ஈன்று 
கமக்காரன் கலப்பையும்மாகி 
பயிர்நிலத்து சத்துமாகி
காளை ஓட்டும் சக்கரமாகி 
இடியப்ப உரலுமாகி 
 ஈமத்து விறகுமாகி
இணையற்ற பலன் தந்த 
எங்களூர் பூவரசு 

நன்றியுடன் 
அருளீசன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக