மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 27 பிப்ரவரி, 2010

பெண்ணுக்கு ஓர் தினம் பெண்ணோ ஓர் இனம்


பெண்ணுக்கு ஓர் தினம்
பெருமை கொள்ளும்
பெண்ணினம்
மண்ணுக்கு மனிதம் தந்த

மாதருக்காய் ஓர் தினம்
பெண்ணுக்காய் ஓர் தினம்
எண்ணிக்கை கடந்தபோதும்
என்னும் விழிக்கவில்லை
ஏனோ மக்கள் மனம்
காலமதை உணர்த்த தமிழ்
கண்ணும் கருத்துடனும்
மண்ணில் பெண்ணடிமை
மாற்றி அமைத்தங்கு
பெண்ணின் பேர்ராற்றலில்
பெருமிதம் கண்டுள்ளார்
கண்டும் காணாதோர்
கண்கள் விழிக்க வேண்டும்
விழிக்கா மனங்களுக்கு
விளக்க உரை கொடுக்கவேண்டும்
கருவரிந்து கொலை
கள்ளிப்பால் ஊட்டும் நிலை
இரக்கமற்ற சீதனம்
கை உதை கால் உதை
இவையெல்லாம்
ஒழியவேண்டும்
பெண்ணோர் இனம்
ஆனோர் இனம்
என்றநிலை மாறவேண்டும்
புலத்தில் பெண்புலி வீரம் கண்டும்
சாதனைப் பெண்
சந்திரனில்நின்றும்
மக்கள் இன்றும் மாறவில்லை
மனதை மாற்றி
பெண்விடுதலை காண்போம்
அப்போதுதான்
பெண்ணுக்கு ஓர் தினம்

நன்றியுடன்
அருளீசன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக