நாளும் பொழுதும்
நம் நல்வரவை நாடி
கண்டகனவு கோடி
பூவுலகில் நாம் உதிக்க
புரிந்த துன்பம் கூடி
வேதனையின் வலியால்
வெந்து நொந்த மனம்
பிஞ்சான எமை கண்டு
வேதனை மறந்து
தாய்மையின் பூரனத்தில்
தனக்குள்ளே மகிழ்ச்சி கொண்டாள்.
விழிமூட மறந்து
பரிவோடு நம் தேவை உணர்ந்து
பகல் இரவாய் பணிசெய்து
பள்ளிக்கும் அனுப்பி
பாரில் நம்மை உயரவைத்த
பாசப்பிணைப்பு இன்று
பராமரிப்பு நிலையத்தில்,
அன்று உதிரம் இறைத்து
ஊட்டி வளர்த்த உயிர்
பார்பதற்கு யாருமின்றி
பரதவித்தால்
அந்ததாயின் உதிரம்
தாங்குமா.
தாங்குமா.
நன்றியுடன்
அருளீசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக