உன் அறிமுகம் இல்லாமலே
என்மேல் ஆசை கொண்டவளே
உன்காதலை அறிந்து
நான் விலகி விலகி சென்றாலும்
பின் தொடர்ந்து தொடர்ந்து வந்தவளே
என் மேல் பிரியமானவளே
நி உன் இலக்கை அடையும் முன்பே
முழுமையாக ஆழ எண்ணுகின்றாய்
ஒருவிதத்தில் உன்னை விலத்திவிட
எனது மனம் துடியாய் துடிக்கிறது
ஆனால் நீயோ உன்காதலை
என்னிடம் சொல்லும் போதே
எனது காதலை நீங்கள் ஏற்றுக்கொண்டால்
நான் உடன்கட்டை ஏறுவது
முடிந்த முடிவு என்றாய்
அன்று சொன்னதை
எண்ணிப்பார்க்கும் போது
உன்மேல் பரிதாபம் எனக்கு
என்னை மாற்ற நினைத்தாலும்
உன் ஆக்கிரமிப்பின் வேகம்
என்னை வேறுக்கவைக்கிறது
என்மேல் பிரியமானவளே
உனக்கு மட்டும் தான் -நான்
சொந்தம் என்று எண்ணியதால்
என் இளமையை பறிக்கின்றாய்
உன் சுயநலத்தில் என் இளமை
போகிறதே அதை நீ புரியாயோ.
நன்றியுடன்
அருளீசன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக