மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 21 டிசம்பர், 2009

உனை பிரிந்த மூன்றாண்டில்






உனை பிரிந்த மூன்றாண்டில்
பாலா அண்ணா
உலகமே இருண்டதண்ணா
நேரிய சிந்தனைக்கு

 நெறித்துனையாய்
நின்றவனே
பாதியிலே உனைபிரித்து
பரமனவன் செய்த சதியால்
கரிகாலன் துணை இழந்து
கட்டிவைத்த கோட்டை உடைந்து
கயவர்  கை ஓங்க மண்ணில்
உலகமே உதவி அண்ணா
ஊரோடு அழிந்து
உயிர் கொலைகள் நிறைந்து
எஞ்சிய மக்கள் எல்லாம்
எட்டுப்பட்டு முட்கம்பி கூட்டில்
ஏதிலிகள் ஆனார் தறப்பாள்  கூண்டில்
எச்சிக்கு அலையும் கூட்டில்
எங்குமே நிறைந்து
தாய்மானம் விற்று
தன்லாபம் தேடும் தரகர் கூட்டாகி
தமிழ் மானம் விலை போக
துணைபோகுது அண்ணா
அண்ணா நியின்றிய ஆண்டில்
உனை நினைக்கவந்து
மனப்பாரம் இறக்க
எதோ எதோ கூறி
உங்கள் சேவை மறந்தேன்
உயிரோடு இருந்திருந்தால்
இவையாவும் நடந்திரா தோ
என்ற எண்ணம் எனை
உலுக்குதண்ணா
எங்கே ஒரு கணம்
புத்துயிர் பெற்றேனும்
வாருங்கள்
கரிகாலன் கை ஓங்கட்டும்
கயவர்கள் கூட்டம ஓடட்டும்


நன்றி
அருளீசன்   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக