மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், 20 செப்டம்பர், 2018

தமிழ் அகராதி














தமிழ்ப்பெருந் தொண்டர்
தன்னுயிர் நீர்த்தார்
அளப்பெருங்காரியங்கள்
அன்னைத் தமிழுக்காய் ஆற்றிய

அரும் பெருந் தலைவர்
கலையால் தமிழ் வளர்த்து
கழப்பெருமை கண்டவர்
பள்ளிப்பருவத்து கற்சுவை மேம்பி
சொற் சுவையின் பால்
உள்ளக்குமுறல் தன்னை
எழுதுகோல் கொண்டு
வண்ணமுற உருத்தியவர்
தான் அறிந்ததையும்
தன்னில் உதித்ததையும்
இயல், இசை ,நாடகம் ,மூலம்
அடியெடுத்து கவிதை, கட்டுரை,
கதைகள் ,சினிமா என்றெல்லாம்
தமிழர்கள்  நெஞ்சங்களில்
அழியாது குடிபுகுந்தார்
அண்ணாவின் கொள்கைவழி
அரசியலில் சாணக்கியத்தால்
பலமுறை தலமை ஏற்று
தமிழ் மாநில முதல்வரானார்
மிகிந்த பிரயத்தனத்தால்
தமிழுக்கு செம்மொழி அதிகாரம்
பெற் றெடுத்த பேர்றறிஞ்ஞர்
திருக்குறளுக்கு விளக்கவுரையும்
அருளிய பெருந்தமிழ் பிரியர்
சொல்லடங்கா சாதனைகள்
தமிழுக்கு ஆற்றியதால்
தமிழ் வாழும் காலம் வரை
அவர் உயிர்வாழும் அகராதி.

                           அருள்ஈசன்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக